புதன், 15 ஏப்ரல், 2009

மீபோ

மீபோ என்னது அமீபா மாதிரி பேரு நீ போனு சொன்னா கூட புரியும் மீபோனா?

நம்மில் பலருக்கு ஒருவித சோம்பேறித்தனம் இருக்கும் எனக்கும் தான் இதை போடலாமா வேணாமானு ரெம்ப நேரம் தட்டச்சு செய்யுறதுக்கு சிரமப்பட்டுக்கிட்டு செய்றேன். இன்றைய இணைய வாழ்க்கையில் உரையாடல்(சாட்டிங்) என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மின்னஞ்சல் முகவரி துவக்கினால் கூடவே உரையாடல் வசதியும் இலவசம் என்பது போல இருக்கிறது நிலைமை. யாஹூ,ஜிமெயிலில் ஆரம்பிச்சு ப்ளாக்கர் வரை(நான் கூட ஒன்னு வைக்கலாமேனு யோசிக்கிறேன்) சாட்டிங் எஞ்சின் வைச்சாச்சு. இதுல பலது பார்த்தீங்கனா உதாரணமாக யாஹூ மெசஞ்சர் , ஜிடாக் , ஸ்கைப் , எம் எஸ் என் போன்று இருப்பவைகளை தனியாக(ஸ்டேன் அலோன்) இயங்கும் தூதுவனை(மெசஞ்சர்) அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக இயக்கி கொண்டு வருகின்றன. கணினியை பூட் செய்து லாகின் ஆனவுடன் விண்டோஸூக்கு அப்புறம் வரிசையாக லோட் ஆவது இந்த மெசஞ்சர்களே ஏன்னா இவை இல்லேனா நமக்கு பொழுதும் போகாது. கடலை போட ஒன்னு , வீட்டுக்கு பேச ஒன்னு , அலுவலக விசயத்துக்கு ஒன்னு இப்படி பலது வச்சு மெயிண்டன் பண்ணுவோம் . 
இப்படி நிறைய தூதுவனை இறக்கி , நிறுவி பயன்படுத்த சோம்பேறித்தனம் இல்லை தரவிறக்கம் செய்ய அனுமதிக்காத இணைய இணைப்பு போன்ற சூழல்களில் நமக்கு பயன் அளிப்பது இந்த மீபோ.
இதில் ஒரு கணக்கை(இங்கேயுமா அப்படி கேக்குறது இங்க கேக்குது) துவக்கி மீபோ காரவங்க கொடுக்கும் ஒரு சிறிய டெக்ஸ்டாப் அறிவிப்பானை இன்ஸ்டால் செய்துக்கங்க ரெம்ப சின்ன பைல் இது.சில விநாடிகளில் முடிந்துவிடும். மீபோ இனையதளத்தில் நுழைந்து உங்கள் மீபோ கணக்கினுள் சென்று அங்கு உங்களுடைய யாஹூ,ஜிமெயில், எம் எஸ் என் , ஏஐஎம்,ஐசிக்யூ , பேஸ்புக் போன்ற விவரங்கை தெரிவித்துவிட்டு தளத்தை மூடிவிடலாம். உங்கள் கணினியில் மீபோ தூதுஅறிவிப்பானை (முன்பே நிறுவியது) ஆன்லைனில் வைத்துவிட்டால் போதும் எந்த அக்கவுண்டில் யார் வராங்க யார் போறாங்க என்ன மெசேஜ் அடிக்கிறாங்க போன்ற வசதிகள் கிடைக்கும்.
சாட் செய்ய வேண்டும் என்றால் அந்த தூது அறிவிப்பானை சொடுக்கினால் மீபோ தளம் சென்று அங்கு சாட் செய்யலாம் ப்ரவுசரில்.

இது இன்னாப்ப்பா இதே மாதிரி கொள்ள மேட்டர் கிடக்கு இது இன்னா புச்சுனு கூவிகினு இருக்கனு அண்ணாத்த கூவுறது கேக்குது. 
மிச்ச ஆலின் ஒன் மெசஞ்சரில் இல்லாதவைனா வெப்கேம் யூஸ் செய்யலாம், ஒலி பயன்படுத்தலாம் , ஸ்மைலி பயன்படுத்தலாம் யாஹூ வெப் மெசஞ்சரிலே வெப்கேம் பயன்பாடு இல்லை என்பது குறிப்பிட தக்கது.

மீபோ தமிழ் இடைமுகப்பையும்(இண்டர்பேஸ்) கொண்டுள்ளது, தமிழ் இடை முகப்பு வெகுநாட்களுக்கு முன்பே வந்துவிட்டது.

நன்றி வணக்கம்.